அங்கிங்கெனாதபடி எங்கும் வாட்டுகின்ற நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. இந்நோயால், உலக அளவில் சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நோய் குறித்த விழிப்புணர்வு உலக மக்களிடையே இருப்பது அவசியம் என்ற நோக்கில்தான், ஆண்டு தோறும் மே 7-ம் தேதி உலக ஆஸ்துமா நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆஸ்துமா நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளையும், அப்படி வந்துவிட்டால், அதைக் கட்டுப்படுத்துவதற்குக் கடைப்பிடிக்க வேண்டிவற்றையும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் சில வழிமுறைகள் இதோ…* தூய்மையான காற்று வீசும் பகுதிகளில் மட்டுமே வசிப்பது அவசியம்.
* தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது நன்மை தரும்.
* கொழுப்புச் சத்து ௦அதிகம் உள்ள பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவு வகைகள், மீன் வகைகளில் அதிக கொழுப்பு உள்ள சுரா, கெளுத்தி, மடவை, கானாங்கத்தை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* அதிக காரமும் அதிக புளிப்பும் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.
* எளிதில் ஜீரணமடையும் உணவு வகைகளையே உட்கொள்ள வேண்டும்.
* மூச்சு விடுதல் சிரமம் என்பதால், வயிறு முட்ட உண்ணுதல் கூடாது.
* இரவு உணவு சாப்பிடுவதை 7 மணியளவில் வைத்துக்கொள்வது சிறந்தது.
* கீரை வகைகளில் தூதுவளை, முருங்கக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, சுண்டக்காய், சுண்ட வத்தல் ஆகியவற்றை பயன்படுத்துவது ஆரோக்கியம் தரும். இவை குறிப்பாக ஆஸதுமா நோய்க்கு மூல காரணமான சளியை அகற்றுகிறது.
* தொடர்ச்சியாக இருமல், சளி, நெஞ்சில் பாரம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உரிய நேரத்தில் ஆஸ்துமாவைக் கண்டறிந்து, உரிய சிகிச்சையை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
Recent Posts
Recent Comments
abubucker4600 on Doubt! abubucker4600 on Hold Me For A While – A… abubucker4600 on A.R.Rahman: Make way for the Y… abubucker4600 on Genius abubucker4600 on Language Might Archives
Categories
Meta