காய்ச்சல் வந்துவிட்டாலே… ‘இதைச் சாப்பிடாதே’, ‘அதைச் சாப்பிடாதே’ என நலம் விரும்பும் பலரும் சொல்வதைக் கேட்கிறோம். ஆனால், காய்ச்சலின்போது சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
காய்ச்சலின்போது மிருதுவான மற்றும் திரவ உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், இட்லி, கஞ்சி, இடியாப்பம், பழங்கள் மற்றும் பழச்சாறுகளைச் சாப்பிடலாம்.
அதேநேரத்தில் காரம் மற்றும் மசாலா வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். காய்ச்சலின்போது பழச்சாறு, இளநீர், மோர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.
அவை தவறான அறிவுரையே. காய்ச்சலின்போது ஊட்டச்சத்து அவசியம் என்பதால், மேற்குறிப்பிட்டவற்றை அச்சமின்றி எடுத்துக்கொள்ளலாம்.
காய்ச்சல் குறைந்தவுடன் புரதச் சத்து அதிக அளவில் தேவைப்படுவதால், பால், தயிர், பருப்பு, கீரைகள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
-
Recent Posts
Recent Comments
abubucker4600 on Doubt! abubucker4600 on Hold Me For A While – A… abubucker4600 on A.R.Rahman: Make way for the Y… abubucker4600 on Genius abubucker4600 on Language Might Archives
Categories
Meta