‘உடல் பருமனாகிக் கொண்டிருக்கிறதே’, ‘உடல் உறுதியுடன் இல்லையே’… இவ்வாறெல்லாம் வருந்துவோருக்கு ஓர் எளிய வழி யாதெனில், அது காலை உணவை தவறாமல் உட்கொள்வதே!
‘பருமனைக் குறைக்கிறேன்’ என்று கூறி, காலை உணவை பலரும் தவிர்க்கின்றனர். இந்த முயற்சியால் உடல் எடைக் கூடுமே தவிர, குறையாது என்பது அவர்களில் பலருக்கும் தெரிவதில்லை.
காலை உணவைத் தவிர்க்கும் பலர், நொறுக்குத் தீனிகளையும், டீ மற்றும் காபி வகைகளையும் உட்கொண்டு வயிற்றை நிரப்பிக் கொள்வர். இதனால், உடல் இளைப்பதற்கு பதிலாக பருமனாவது மட்டுமின்றி, உடல் உறுதியும் குறையும்.
இதுதொடர்பாக அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஐந்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டு, 2,216 பேர்களை மாதிரிகளாக வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வு, 15 வயதுக்கு குறைவானவர்களைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வின் முடிவில், நாள் தோறும் தவறாமல் காலை உணவை உண்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் நிறைந்து காணப்படுவதுடன், உயரத்துக்கு ஏற்ற எடையை மட்டுமே கொண்டுள்ளதும் கண்டறியப்பட்டது.
அதேநேரத்தில், காலை உணவைத் தவிர்த்துவிட்டு சாக்லெட் போன்றவற்றை உட்கொள்பவர்களது உடல் எடை கூடுவது மட்டுமின்றி, உடல் உறுதியற்றும் இருப்பது தெரியவந்தது.
இதனால், காலை உணவைத் தவிர்க்காமல் சத்துள்ள ஆகாரங்களை உட்கொள்வதே சாலச் சிறந்தது என்பது தெளிவு.
-
Recent Posts
Recent Comments
abubucker4600 on Doubt! abubucker4600 on Hold Me For A While – A… abubucker4600 on A.R.Rahman: Make way for the Y… abubucker4600 on Genius abubucker4600 on Language Might Archives
Categories
Meta