வயதான பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு புரதச்சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
வயோதிகத்தில் புரதச்சத்து மிக்க உணவுகளை பெண்கள் உட்கொள்ளும்பட்சத்தில், அவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி போன்ற இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய அவசியம் இருக்காது. இது, சர்வதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
மேலும், வயதான ஆண்களைக் காட்டிலும் வயதான பெண்களுக்கே, வயோதிக பருவத்தில் புரதச்சத்தால் மிகுந்த நன்மை விளைகிறது என்பதையும் மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனால், புரதச்சத்துகள் மிகுதியான அளவில் காணப்படும் மீன், பால், இறைச்சி, பருப்பு வகைகளை 65 வயதைக் கடந்த பெண்கள் தங்களது அன்றாட உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.