உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி இறக்கைக்கட்டி பறக்கவும், எளிதில் மூளை சோர்வு அடையாமல் இருக்கவும் கீழ்கண்ட பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.
உணவுப் பொருட்கள்:
வெள்ளாட்டுப் பால், வாதுமைப் பருப்பு, பறவைகளின் இறைச்சி, ஆட்டின் தலை மற்றும் மூளை, நெல்லிக்கனி, நாரத்தம் பழம் மற்றும் இஞ்சி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூளை பலம் பெறும். சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி போன்றவையும் அதிகரிக்கும்.
மருந்துப் பொருட்கள்:
கோரைக்கிழங்கு, சடா மாஞ்சில், அகிற்கட்டை, சந்தனம், இலவங்கம், கஸ்தூரி, முத்து போன்றவைகளும் மூளைக்கு பலம் தரும் மருந்துப் பொருட்களாக பயன்படுகின்றன.