* தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இரவில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் காலையில் எழும் வழக்கத்தைக் கொள்ள வேண்டும்.
* தூக்கம் வரும் நேரத்தை உணர்ந்து, இரவில் அப்போது மட்டுமே படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
* படுக்கைக்குச் செல்லும்போது எவ்வித அவசரமும் இருக்கக் கூடாது. மாறாக, ரிலாக்ஸாக இருக்க வேண்டும்.
* குட்டித் தூக்கம் போடும் பழக்கத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
* படுக்கையறையை அமைதி நிலவும்படி வைத்திருக்க வேண்டும். அங்கே, தொலைக்காட்சியை ரசிப்பது நல்லதல்ல. மாறாக, புத்தகத்தைப் புறட்டுவது சாலச் சிறந்தது.
* தூங்கப் போவதற்கு முன்பு, இலேசான குளியல் முடித்துவிட்டு, ஒரு டம்ளர் மிதமான சூட்டில் பால் அருந்துவது நல்லது.
* படுக்கைக்குச் செல்வதற்கு சில மணி நேரம் முன்பு வரை, வன்முறை தொடர்பான செய்திகளையோ, சினிமா காட்சிகளையோ தொலைக்காட்சியில் பார்க்கக் கூடாது.
* காபி, தேநீர், கோக் போன்ற பானங்களை தூக்க நேரத்திற்கு 6 மணி நேரம் முன்பு அருந்தக் கூடாது.
* படுக்கைக்குச் செல்லும் நேரத்தில் மதுபானம் அருந்தக் கூடாது; புகைப் பிடிக்கக் கூடாது.
* தூக்க நேரத்துக்கு முன்பாக, கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். மாறாக, எளிய பயிற்சிகளை செய்துக் கொள்ளலாம்.
-
Recent Posts
Recent Comments
abubucker4600 on Doubt! abubucker4600 on Hold Me For A While – A… abubucker4600 on A.R.Rahman: Make way for the Y… abubucker4600 on Genius abubucker4600 on Language Might Archives
Categories
Meta