- வயோதிகர்களுக்கு மட்டுமின்றி, வயதில் இளையவரான பலருக்கும் நினைவாற்றல் போதுமானதாக இல்லாத நிலை ஏற்படுகிறது.
- இதற்கு, உரிய உயிர்சத்துகள் (வைட்டமின்) குறைபாடே முதன்மையான காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை செய்வது மிக மிகச் சுலபம் என்றால் நம்பமுடிகிறதா? - ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நாம் நிதமும் ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு ஆகிய பழங்களை உட்கொண்டோமானால் நினைவாற்றல் பெருகுவதோடு, மூளையும் உரிய முறையில் பாதுகாக்கப்படுகிறது.
- இதனை, நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்திலுள்ள மருத்துவ விஞ்ஞானிகள் தங்களது ஆய்வு ஒன்றின் மூலம் நிரூப்பித்துள்ளனர்.
- இந்த மூன்று கனிகளிலும் உள்ள வைட்டமின் சத்துகள், மினரல் சத்துகள் மற்றும் ஃபைபர் ஆகியவை, மூளைக்கு உறுதுணைபுரிவதாக அந்த ஆய்வு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கிறது.
- எனவே, நம் அன்றாட உணவில் இம்முக்கனிகளைச் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ வழிவகுப்போம்.