உனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும்’ என்று சிலரை பார்த்து கேலியாக சொல்வதுண்டு. ஆனால், உண்மையிலேயே பெரும்பாலானோருக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
எப்படி சாப்பிடவேண்டும் என்பது பற்றிய சில குறிப்புகள்:
* பசிக்கும்போது மட்டுமே உண்ணவேண்டும்.
* உணவை சற்று சூடாக சாப்பிட்டால் எளிதில் செரிமாணம் ஆகும்.
* உணவை அப்படியே விழுங்காமல், நன்றாக மென்று உண்ணவேண்டும். இதன் மூலம் பற்களுக்கு வலு கூடுகிறது. எளிதில் உணவு ஜீரணம் ஆவதால், ஜீரண உறுப்புகளுக்கும் வேலை குறைகிறது.
* சாப்பிடும்போது, அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியாகவோ குடிநீர் அருந்தக்கூடாது. மற்ற நேரங்களிலும் இதை பின்பற்றுவது உடலுக்கு நல்லது.
* உணவின்போது, அதிக காரம் மற்றும் அதிக புளிப்பு சுவைகளை தவிர்க்கலாம். அதிகமான இனிப்புப் பொருட்களையும் ஒதுக்க வேண்டும். இவை பசியை கெடுப்பதோடு உடல் நலத்துக்கு தீமையை ஏற்படுத்தும்.
* அசைவ உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.
* மூக்கு முட்ட சாப்பிடக்கூடாது. அளவாக அல்லது ஒரு பிடி குறைவாக உண்ணலாம். சாப்பிட்டவுடன் சிறிது ஓய்வு தேவை. மதிய உணவு முடிந்ததும் உடனடியாக பணியில் ஈடுபடக்கூடாது.
* இரவு உணவு முடிந்தவுடனேயே தூங்க செல்வதை தவிர்க்கவும். அப்படி சென்றால் தூக்கம் முழுமையாக இருக்காது. தேவையற்ற கனவுகள் தோன்று தூக்கத்தை அலைகழிக்கும்.
* அனைத்து விதமாக சத்துக்களையும் கொண்ட, சமச்சீரான உணவுகளை சாப்பிட வேண்டும்.
* மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், அதிக உணவு உண்ணுவதை தவிர்க்கவும். இதனால், சிந்திக்கும்போது புதிய சிந்தனைகள் வராது. அதற்கு பதிலாக தூக்கம்தான் வரும்.